Showing posts with label கைகசி. Show all posts
Showing posts with label கைகசி. Show all posts

Monday, 15 June 2026

மது சக்யம் | சர்க்கம் – 025 (52)

Friendship forged with Madhu | Sarga-025 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வரங்களைப் பெற்ற இந்திரஜித்; கும்பீனசியைக் கவர்ந்து சென்ற மது; மதுவுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்; இந்திரனை வெல்ல கைலாசத்தில் இறங்கியது...

Ravana Kumbinasi Madhu

{அகஸ்தியர் ராமனிடம்}... கோரமான அந்த {தண்டக} வனத்தைக் கொடுத்துத் தன் பகினியை {சகோதரி சூர்ப்பணகையைத்} தேற்றிய பிறகு, அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மகிழ்ச்சியும், ஸ்வஸ்தமும் {நலமும் / நிம்மதியும்} அடைந்தான்.(1) பலவானான அந்த ராக்ஷசேந்திரன், பிறகு, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நிகும்பிலை என்ற பெயரைக் கொண்ட, லங்கையின் உத்தம உபவனத்தில் பிரவேசித்தான் {சிறந்த சோலையில் நுழைந்தான்}.(2) நூற்றுக்கணக்கான யூப ஆகீர்ணங்களால் {வேள்வித் தூண்களால்} நிறைந்தும், சௌம்யமான சைத்யங்களால் {அழகான வேள்வி மேடைகளால்} அலங்கரிக்கப்பட்டும், செழிப்புடன் {ஒளியுடன்} பிரகாசித்துக் கொண்டிருப்பதைப் போல, அங்கே நடந்து கொண்டிருக்கும் யஜ்ஞத்தை {வேள்வியை ராவணன்} கண்டான்.(3) கருப்பு மான் தோல் அணிந்தவனும், கமண்டலம், சிகை {குடுமி}, துவஜம் ஆகியவற்றுடன் கூடியவனும், பயத்தை உண்டாக்குபவனுமான தன் மகன் மேகநாதனை அப்போது அங்கே {இந்திரஜித்தை ராவணன் அந்த வேள்விச் சாலையில்} கண்டான்.(4)

Wednesday, 17 December 2025

இராவணன் பிறப்பு | சர்க்கம் – 009 (48)

The birth of Ravana | Sarga-009 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுமாலியின் மகளான கைகசிக்கு தசக்ரீவன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர் பிறந்தது; கோகர்ணத்தில் அவர்கள் தபம் செய்தது...

Vishravas and Kaikesi

சிறிது காலத்திற்குப் பிறகு சுமாலி என்ற நாமத்தைக் கொண்ட {பெயருடைய} ராக்ஷசன், ரசாதலத்திலிருந்து வந்து சர்வ மர்த்யலோகத்திலும் {மனிதர்களின் உலகம் முழுவதும்} அலைந்து திரிந்தான்.(1) அவன் நீல மேகத்தைப் போலத் தோற்றமளித்தான், தப்த காஞ்சனத்தாலான {புடம்போட்ட பொன்னாலான} குண்டலங்களை அணிந்திருந்தான். பத்மம் இல்லாத ஸ்ரீயை {தாமரை இல்லாத லக்ஷ்மியைப்} போன்ற தன் கன்னிகையை {மகள் கைகசியை} உடன் அழைத்து வந்தான்.(2) 

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி