Urvashi | Sarga-056 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மீண்டும் உடல் உண்டாகுமாறு பிரம்மனை வேண்டிய வசிஷ்டர்; உபாயம் சொன்ன பிரம்மன்; ஊர்வசியிடம் காமுற்ற வருணன்; ஊர்வசி அடைந்த சாபம்...
இராமனின் பேச்சைக் கேட்டவனும், பகைவீரர்களை அழிப்பவனும், கைகூப்பியவனுமான லக்ஷ்மணன், ஒளிரும் தேஜஸ்ஸுடைய ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்யரே, தேகத்தைத் துறந்த துவிஜரும், பார்த்திபருமான அவ்விருவரும் {மன்னர் நிமியும், வசிஷ்ட ரிஷியும்}, தேவர்களால் மதிக்கப்பட்டவர்களாக தேகத்துடனான சேர்க்கையை மீண்டும் எவ்வாறு அடைந்தனர்?"(2)
