Narada and Parvata | Sarga-054 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நிருகராஜன் சாபத்தை அனுபவித்த வகையை லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...
பரமார்த்தவித்தான {உயர்ந்த பொருளை அறிந்தவனான} லக்ஷ்மணன், ராமனுடைய உரையைக் கேட்டுக் கைகூப்பியவனாக, ஒளிரும் தேஜஸ்ஸுடன் கூடிய ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்தரே {ராமரே}, அல்ப அபராதத்திற்கு {சிறிய குற்றத்திற்கு}, ராஜரிஷியான நிருகருக்கு இரு துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால் அளிக்கப்பட்ட} இத்தகைய சாபம் மற்றொரு மஹா யமதண்டத்தைப் போன்றதாகும்.(2) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பாபத்துடன் கூடிய தம் நிலையைக் கேட்டு, ராஜா நிருகர் குரோதத்தால் நிறைந்திருந்த அவ்விரு துவிஜர்களிடம் என்ன சொன்னார்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(3)
